அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்

Posted On - 28 May 2017
blog

அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்   கோயில் வகை   திவ்ய தேசம்   மூலவர்   பேரருளாளன்   பழமை   500-1000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்- 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம்   ஊர்   செம்பொன்செய்கோயில்   மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 106   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

     பெருமாளின் திவ்யதேசங்கள் 108ல் ஒன்று.108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார்.

     அவரே நம்முடன் இருப்பதால் "பேரருளாளன்' ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார்.இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் தலம், காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன் என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்.கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார்.