அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்

Posted On - 28 May 2017
blog

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்   கோயில்   அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்   கோயில் வகை   வீரபத்திரர் கோயில்   மூலவர்   விஸ்வநாதர்   பழமை   500 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம் - 611 001.   ஊர்   நாகப்பட்டினம்   மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 611 001   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக்  கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர்.விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம்.  வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர். தலவிருட்சமான  இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி  என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள்  உள்ளனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி,  சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன.வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில்  ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின்  தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம்.

கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி சன்னதி முன்பு வைத்திருப்பீர்கள். ஆனால், நாகப்பட்டினம் வீரபத்திரர் கோயிலில், தீபத்தை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, சுவாமி முன்னால் நின்று வழிபடுகின்றனர். விஸ்வநாதர் இங்கு மூலவர். அம்பாள் விசாலாட்சி. இருப்பினும், வீரபத்திரருக்கே முக்கியத்துவம். வீரபத்திரர் கோயில் என்றே பெயரும் இருக்கிறது. அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் என இரண்டு உற்சவமூர்த்திகள் இருக்கின்றனர்.

தலவிருட்சமான இலந்தை மரத்தடியில், சிவலிங்கமும், அக்னி வீரபத்திரர் சிலையும் உள்ளன. வீரபத்திரர் சன்னதி முன்மண்டபத்தில் வீரசக்தி அம்பாள் இருக்கிறாள். வீரமாகாளி என்ற காவல் தெய்வத்திற்கு சன்னதி இருக்கிறது. இவள் வீரபத்திரருக்கே காவலாக இருப்பதாக ஐதீகம். இந்த அம்பிகையின் பாதத்திற்கு கீழ் மூன்று அசுரர்கள் உள்ளனர்.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இவளுக்கு அரிசிமாவு களி படைக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம்.