அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்

Posted On - 28 May 2017
blog

அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்   கோயில் வகை   சிவன் கோயில்   மூலவர்   விஸ்வநாதர்   பழமை   500-1000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி - 609110 நாகப்பட்டினம் மாவட்டம் .   ஊர்   சீர்காழி   மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609110   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம்.கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.  சுற்றுப்பிரகாரத்தில் கமல விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.ராஜ கோபுரத்திற்கு  வெளியே ஜிதேந்திரிய செல்வ ஆஞ்சநேயர், அரசமரத்து விநாயகர், ராகு, கேது சன்னதிகள் உள்ளன. கோயில் சிறியது ஆயினும் சாஸ்தா வரமளித்து காக்கும்  கடவுளாக அருள்பாலிக்கிறார். இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் "கைவிடேலப்பர்' என்ற திருப்பெயர் சாஸ்தாவுக்கு ஏற்பட்டது. கோயிலின்  தென்கிழக்கு மூலையில் பூரண புஷ்கலா சமேதராக கைவிடேலப்பர் அருள்பாலித்து வருகிறார். சீர்காழி தென்பாதியில் விஸ்வநாதர் கோயில் பகுதியிலேயே இந்த  சாஸ்தா தன் தேவியரான பூரண, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறுகாலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். அமைதியான  சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காஞ்சிப்பெரியவர் வந்து தரிசனம் செய்திருக்கிறார். இப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் முன் இங்கு வந்து  தரிசனம் செய்து கிளம்புகிறார்கள்.

சிவன் கோயிலாக இருந்தாலும் சாஸ்தாவே இங்கு பிரதானம். கோயிலில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள். சுற்றுப்பிரகாரத்தில் கமல விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. ராஜ கோபுரத்திற்கு வெளியே ஜிதேந்திரிய செல்வ ஆஞ்சநேயர், அரசமரத்து விநாயகர், ராகு, கேது சன்னதிகள் உள்ளன.

கோயில் சிறியது ஆயினும் சாஸ்தா வரமளித்து காக்கும் கடவுளாக அருள்பாலிக்கிறார். இந்திராணியை கைவிடாது காப்பாற்றிய இடமாதலால் "கைவிடேலப்பர்' என்ற திருப்பெயர் சாஸ்தாவுக்கு ஏற்பட்டது. கோயிலின் 
தென்கிழக்கு மூலையில் பூரண புஷ்கலா சமேதராக கைவிடேலப்பர் அருள்பாலித்து வருகிறார்.

சீர்காழி தென்பாதியில் விஸ்வநாதர் கோயில் பகுதியிலேயே இந்த சாஸ்தா தன் தேவியரான பூரண, புஷ்கலையுடன் ஒரு காலை தொங்கவிட்டுக் கொண்டும், மறுகாலை குத்துக்காலிட்டும் அமர்ந்துள்ளார். அமைதியான 
சூழ்நிலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காஞ்சிப்பெரியவர் வந்து தரிசனம் செய்திருக்கிறார். இப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் முன் இங்கு வந்து தரிசனம் செய்து கிளம்புகிறார்கள்.