அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

Posted On - 27 May 2017
blog

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்   கோயில் வகை   விஷ்ணு கோயில்   மூலவர்   ஆதிநாராயணர்   பழமை   500-1000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், பாரியூர் - 638 476 ஈரோடு மாவட்டம்.   ஊர்   பாரியூர்   மாவட்டம்   ஈரோடு [ Erode ] - 638 476   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது.  பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு.முன்மண்டபத்தில்  சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர்.சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி,  தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம்  செய்யலாம் என்பது விசேஷம்.விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில்,முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது. இதனால்,  மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம்  நீங்கியது.பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.

     இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் விசேஷம் என்பர். இங்கு இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வது சிறப்பு. முன்மண்டபத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வீர ஆஞ்சநேயர் இருவரும் அருகருகில் இருந்து அருளுகின்றனர்.

     சஞ்சீவி ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடி, தன் வலதுகாலை மட்டும் சற்று முன்னே தள்ளி வைத்து புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.இங்கு ஆஞ்சநேயரின் மூன்று கோலங்களையும் தரிசனம் 
செய்யலாம் என்பது விசேஷம். விவசாயத்தில் செழித்து திகழும் இப்பகுதியில்,முன்னொருகாலத்தில் நாட்டில் மழை பொழியாமல் பஞ்சம் ஏற்பட்டது.

     இதனால், மக்கள் மழை வேண்டி இவ்விடத்தில் சிறிய பெருமாள் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அதன்பின் மழை பொழிந்து மக்களின் பஞ்சம் நீங்கியது.பின் மக்கள் இவ்விடத்தில் பெரிய அளவில் கோயில் கட்டி வழிபாட்டிற்கு கொண்டு வந்தனர்.