அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில்

Posted On - 27 May 2017
blog

அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில்   கோயில்   அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில்   கோயில் வகை   முருகன் கோயில்   மூலவர்   பாலதண்டாயுத பாணி   பழமை   500 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில் கெம்பநாயக்கன்பாளையம், கொருமடுவு சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.   ஊர்   கொருமடுவு   மாவட்டம்   ஈரோடு [ Erode ] -   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்துக்கு ஈசனுக்கு வலது பாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து  வலது காலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பதும், இங்குள்ள தெய்வங்களுக்கு பக்தர்கள் தாங்களே நேரிடையாக பூப்போட்டு  வணங்குவதும் இத்தலத்தின் சிறப்பு. பழநியைப்போலவே இத்தல முருகன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது மேலும் சிறப்பு. இயற்கையான சூழலில்  மலைகள் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது கொருமடுவு பாலதண்டாயுத பாணி ஆலயம். தன்னிகரற்ற அருளுடன் முருகன்  இங்கே மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகனின் திருவிளையாடல் நடந்த இடம் அல்லது முருகன் சிவ வழிபாடு செய்த தலங்களில் மட்டுமே  மேற்கு பார்த்த முருகன் கோயில் அமையும். அந்த வகையில் இதுவும் சிறப்பான கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் ஒரு  முறையாவது தெய்வங்களின் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற நியதிப்படி இங்கு நடைபெறும் ஈசன் ஈஸ்வரியின் திருமணம்  அனைவரும் காணவேண்டிய அற்புதமான காட்சியாகும்.  

பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்துக்கு ஈசனுக்கு வலது பாகத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து வலது காலை தொங்கவிட்டு இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பதும், இங்குள்ள தெய்வங்களுக்கு பக்தர்கள் தாங்களே நேரிடையாக பூப்போட்டு வணங்குவதும் இத்தலத்தின் சிறப்பு. பழநியைப்போலவே இத்தல முருகன் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது மேலும் சிறப்பு.

  இயற்கையான சூழலில் மலைகள் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது கொருமடுவு பாலதண்டாயுத பாணி ஆலயம். தன்னிகரற்ற அருளுடன் முருகன் இங்கே மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகனின் திருவிளையாடல் நடந்த இடம் அல்லது முருகன் சிவ வழிபாடு செய்த தலங்களில் மட்டுமே மேற்கு பார்த்த முருகன் கோயில் அமையும். அந்த வகையில் இதுவும் சிறப்பான கோயில் என்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் ஒரு முறையாவது தெய்வங்களின் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற நியதிப்படி இங்கு நடைபெறும் ஈசன் ஈஸ்வரியின் திருமணம் அனைவரும் காணவேண்டிய அற்புதமான காட்சியாகும்.