அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில்

Posted On - 27 May 2017
blog

அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில்   கோயில் வகை   சிவன் கோயில்   மூலவர்   மார்க்கசகாயேஸ்வரர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி நிர்வாக அதிகாரி, அருள்மிகு மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில், ஒரத்தூர் - 608 201. கடலூர் மாவட்டம்.   ஊர்   ஒரத்தூர்   மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 201   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியின் முன்புறம் இருக்கிறார்.இவ்வூரின் எல்லையில் ஓடும்  வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில் இது. வாழ்க்கை மீதான பயம் உள்ளோர் தெளிவு கிடைக்க, தங்கள்  நட்சத்திர நாள் அல்லது ஏதேனும் ஒரு திங்களன்று இங்கு வந்து, சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றி, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.  "திக்கற்றோருக்கு தெய்வமே துணை!' என்பர். வாழ்வில் திசை தெரியாமல், குழப்பத்தில் இருப்போர் மனக்குறை நீங்கி, நிம்மதி பெறுவதற்காக வழிபட வேண்டிய  விசேஷ தலம் இது.அம்பாள் மரகதவல்லி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். நவராத்திரி நாட்களில் இவள் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருவாள்.  இந்நாட்களில் இவளுக்கு அபிராமி அந்தாதி பாடி விசேஷ பூஜை நடக்கும். ஆடி, தை வெள்ளியில் இவளுக்கு விளக்கு பூஜை நடக்கும்.பிரகாரத்தில் உள்ள நால்வர்  சன்னதியில் குருபூஜை வைபவம் விசேஷமாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் புறப்பாடாவார்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் அமைப்பில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியின் முன்புறம் இருக்கிறார். இவ்வூரின் எல்லையில் ஓடும் வெள்ளாறு நதி, இங்கு மட்டும் வளைந்து ஓடுகிறது. இந்நதிக்கரையில் அமைந்த கோயில் இது. வாழ்க்கை மீதான பயம் உள்ளோர் தெளிவு கிடைக்க, தங்கள் நட்சத்திர நாள் அல்லது ஏதேனும் ஒரு திங்களன்று இங்கு வந்து, சிவன் சன்னதியில் நெய் தீபமேற்றி, சர்க்கரைப்பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள். 

"திக்கற்றோருக்கு தெய்வமே துணை!' என்பர். வாழ்வில் திசை தெரியாமல், குழப்பத்தில் இருப்போர் மனக்குறை நீங்கி, நிம்மதி பெறுவதற்காக வழிபட வேண்டிய விசேஷ தலம் இது.அம்பாள் மரகதவல்லி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் இருக்கிறாள். நவராத்திரி நாட்களில் இவள் ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருவாள். இந்நாட்களில் இவளுக்கு அபிராமி அந்தாதி பாடி விசேஷ பூஜை நடக்கும்.

ஆடி, தை வெள்ளியில் இவளுக்கு விளக்கு பூஜை நடக்கும்.பிரகாரத்தில் உள்ள நால்வர் சன்னதியில் குருபூஜை வைபவம் விசேஷமாக நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் புறப்பாடாவார்.