அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்

Posted On - 26 May 2017
blog

  கோயில்   அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu Marundeeswarar Temple]   கோயில் வகை   சிவாலயம்   மூலவர்   மருந்தீஸ்வரர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை-600 041. சென்னை மாவட்டம்.   ஊர்   திருவான்மியூர்   மாவட்டம்   சென்னை [ Chennai ] - 600 041   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

இத்தல விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். ராஜகோபுரம் 5 நிலை உடையது. நைவேத்தியம் பொங்கல் படைக்கப்படுகிறது. தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே தலம் விளங்குகிறது. இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.  பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம்.