பிரெட் புலாவ்

Posted On - 09 Apr 2017
blog


தேவையானவை: சீரகசம்பா அரிசி - 250 கிராம், தேங்காய்ப் பால் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, தயிர் - 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா ஒன்று, பிரெட் துண்டுகள் - அரை கப் (எண்ணெயில் பொரித்தது), எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை சிறிது நேரம் ஊற வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும்... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் தயிர், உப்பு, தேங்காய் பால் சேர்த்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, வெந்ததும் இறக்கவும். இதனுடன் வறுத்த பிரெட் துண்டுகளை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.