சௌசௌ பிரியாணி

Posted On - 07 Apr 2017


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், சென்னா (கொண்டைக் கடலை) - 4 டேபிள்ஸ்பூன் (ஊறவைக்கவும்), மீல்மேக்கர் (டிபார்ட் மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, கேரட் துருவியில் துருவிய சௌசௌ - ஒரு கப், தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரி - 2 டேபிள் ஸ்பூன், சிறிய சதுரங்களாக வெட்டிய பிரெட் துண்டுகள் - 8, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க: தக்காளி - ஒன்று, தேங்காய்த் துருவல் - கால் கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு.

செய்முறை: அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும். மீல்மேக்கரை 20 நிமிடம் ஊற வைக்கவும். பச்சரிசியை வெறும் வாணலியில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, சௌசௌ துருவல், கேரட் துருவல் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் போட்டு மேலும் வதக்கவும். ஊறவைத்த மீல்மேக்கரிலிருந்து நீரைப் பிழிந்து எடுத்துவிட்டு இதனுடன் சேர்த்துக் கிளறவும். அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கி, அரை கப் தயிரில் ஒரு கப் நீர் சேர்த்துக் கலந்து... அரிசி, சென்னா, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். பிறகு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி வெளியேறியதும், வாணலியில் நெய் விட்டு முந்திரி, பிரெட் துண்டுகளை வறுத்து பிரியாணியில் சேர்த்துக் கலந்துவிடவும்.