குறைந்த கொழுப்பு டயட் உடல் எடையை குறைக்காது, உடல்நலனை தான் குறைக்கும்!

Posted On - 28 Mar 2017
blog

h57

உடல் எடை குறைக்க வேண்டுமானால், உடனே கொழுப்பு குறைந்த உணவை அனைவரும் உட்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் விரைவாக உடல் எடை குறையும் என்ற எண்ணம் மக்கள் இடையே இருக்கிறது. இதனால் உங்களுக்கு விரைவாக உடல் எடை குறைகிறதோ இல்லையோ, உடல்நலன் குறைந்துவிடும்.

ஆம், அதிகமாக கொழுப்பு குறைவான உணவை மட்டும் உட்கொள்வதால், உடல் நலனை பாதுகாக்கும், நல்ல கொழுப்புச்சத்தான எல்.டி.எல் கொழுப்பும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும் இது, உடல்பருமன், இரத்த சர்க்கரை, நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படவும் காரணமாக இருக்கிறது…..

குறைந்த கொழுப்பு உணவில் இருக்கும் ஓர் பிரச்சனை என்னவெனில், அதில் சுவை குறைவாக தான் இருக்கும். இதனால் தயாரிப்பாளர்கள் இதில் சுவைக்காக செயற்கை சர்க்கரையை சேர்க்கிறார்கள். இதனால், குறைந்த கொழுப்பு உணவில் சர்க்கரை அளவு அதிகமாக காணப்படுகிறது. மேலும் சர்க்கரை பசியை தூண்டும் குணமுடையது.

குறைந்த கொழுப்பு உணவுகள் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்க செய்கிறது. ட்ரைகிளிசரைடுகள் அதிகமானால் உடல்பருமன் அதிகரிக்கும். மேலும், இதய பாதிப்புகள், டைப் 2 நீரிழிவு ஏற்படவும் இது முக்கிய காரணியாக இருக்கிறது.

குறைந்த கொழுப்பு உணவைவுகள், ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவையும் குறைத்துவிடுகிறது. இதனால், ஆண்மை குறைப்படும் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதனால் உடல்பருமன் அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எச்.டி.எல் கொழுப்பு எப்படி இதய நலனை கெடுக்கிறதோ, அதே போல எல்.டி.எல் கொழுப்பு இதய நலனை காக்கும் திறன் கொண்டது. கொழுப்பு குறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து குறைந்து, இதய நலனை கெடுக்கிறது.