தொந்தியை குறைக்க யோகா மற்றும் உடற்பயிற்சி

Posted On - 27 Mar 2017
blog

எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்தா குறையுமுன்னு பார்க்கலாம்.

சுலபமான வழி தான். தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். நாம்மளால மடங்காம கால தூக்க முடியுமா? சரி சின்ன பயிற்சி செய்வோமே.

இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும், 5 முறை இவ்வாறு செய்யவும்.  (கீழ் இருக்கற படத்தை பாருங்க)

சரி கால் முட்டிய மடக்காம கால நேர முடியுது அடுத்து என்ன பண்றது? தரையில் படுங்க. பின் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க. (கீழ் இருக்கற படத்தை பாருங்க). எவ்வளவு உயரத்துக்கு? தரையில் கால் படாம இருக்கணும் அதான் அடிப்படை. 30 வினாடி அந்த நிலையிலேயே இருங்க.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க. குட்டி ஒன்னு உடற்பயிற்சி செய்யவது மாதிரி படம் இருக்கு பாருங்க அதை முடிந்தவர்கள் முயற்சி செய்யலாம்..

 


கையை தூக்கலாமா? தூக்கலாம். கால முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது தான் அடிப்படை.  கையை கீழ் இருக்கும் படத்தின் படி தூக்கலாம் கையை மேல தூக்கும் போது தலை தூக்கியிருக்க வேண்டும். கை கால் தூக்கப்பட்ட நிலையில் 30 வினாடி இருங்கள். 10, 15, ...., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 5 முறை இப்படி பண்ணுங்க.


கையை அப்படியே வைச்சிருக்கறதா? அது ஒரு முறை மற்றொரு முறையில் கையை ஆட்டலாம். கீழ் இருக்கும் படத்தை பாருங்க. அது மாதிரியாட நிலையில் இருந்து கொண்டு கையை கீழையும் பின் சிறிது மேலையும் தூக்கவேண்டும். ஆனா கால்?? எந்த நிலைக்கு கை போனாலும் கால்நிலை மட்டும் மாற கூடாது.  முடியலையே அப்படிங்கீங்களா? உங்களுக்கு சலுகை உண்டு. தமிழ் நாட்டுல இருந்து கிட்டு இலவசம் சலுகை இல்லாமலா? இஃகி இஃகி. அதாவது அடிப்படை என்பது கால் முட்டி மடங்காம நேரா தூக்கனும் என்பது இல்லையா? கைய ஆட்டறது எல்லாம் கால் நேரா இருக்கறப்ப ஏதாவது பண்ணனுமேனு தான் இஃகி இஃகி.


இன்னொரு வழி இருக்கு ஆனா இது தொப்பையை குறைக்க மேலுள்ள வழியை போல் விரைவாக வேலை செய்யாது. ஆனா காவல் காரர் மாதிரியான கெட்டி தொப்பைகளுக்கு உரியவர்கள் இதை செய்யலாம் இஃகி. அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.