குட்டியும், நரைச்சமுடிக்காரரும்

Posted On - 21 Mar 2017

குட்டியும், நரைச்சமுடிக்காரரும் 
நரைச்சமுடிக்காரரும் ஊருக்குள்ளே ஒரு பெரியவர் தான். 
முடி அதிகமாக வளர்திருந்ததால் வெட்டு வதற்காக குடிமகன் வீட்டுக்கு போகிறார். வழியில் எதிர்படும் ஐந்தாவது படிக்கும் பேரனை பார்த்து , " ஓரே தெள்ளார போய்னவாண்டு நுவு, சாலுரா ஆட்ட, போரா ... போய் கூடு தினு ரா ... 
அம்மா பிளிசேரா " என்று வீட்டுக்கு விரட்டி விட்டு நகர்கிறார். 

சின்ன குப்பன் ஊர் குடிமகன்.அவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததால் அவரின் மனைவி சுப்பம்மாள் மூன்று பிள்ளைகளையும் முடிவெட்டும் தொழிலுக்கு அமர்த்த நேரிடுகிறது. மூத்தவர்கள் இருவர் பட்டணம் போய் வேலை செய்கிறார்கள். 
இளையவன் குட்டி பயல் வீட்டின் முன்னே குடிசை போட்டு சிரைக்கிறான். 
குட்டிப்பயல் நல்ல பேச்சாளி. 
நரைச்சமுடிக்காரர் குட்டி பயலுக்காக வீட்டின் வெளியே காத்திருக்கிறார். 
குட்டி நாள்ல சாப்பிட்டுவிட்டு தாமதமாகவே தான் வந்தான். குட்டி வருவதை கண்ட நரைச்சமுடிக்காரர், ஏலே குட்டி விரசா வாலே! உனக்காக எம்பிட்டு தேரந்தேன் காத்திருக்க, வாலே விரசா செத்த பய மாதிரி வாரே " என்கிறார். 
குட்டி பயலோ வரும்போதே வாயில மென்னுகிட்டே வாரான். குட்டி சொல்றான்.. 
வாலே விரசாவா ? என்ன அவசரம் உமக்கு, எங்கிட்டு போறீரு. கழுதைக்கு கட்டமண்ணு கேனக்க நீரு போய் ஆல மரத்தடியிலே அதே கதின்னு குத்தவிச்சு கிடப்பீரு. போதாக்குறைக்கு மத்தியம் தின்னுட்டு உறக்கம் வேர. வேப்பமர நிழலு சிலு சிலு காத்து வேர. நான் அப்படியா ஊருக்குள்ள நீங்க கொடுக்கிற நூறு ஊவா ஆண்டுக்கூலிக்கு மாங்கு மாங்குன்னு சிரச்சி பிறகு பக்கத்தூரு வேர சிரக்க போகணும் என்று சொல்லிக்கொண்டு வந்து உட்கார்ந்த குட்டி. 
நரைச்சமுடிக்காரர் நிற்பதை பார்த்து, " வாரும் ஐயா, வந்து குத்தையும் தேரத்தோட சோழியை முடிச்சிட்டு புறப்படணும்" என்றான். 
நரைச்சமுடிக்காரர் சினம் கொண்டாலும் அதை காட்ட இயலாது திகைத்து ஏலே குட்டிப்பயலே உனக்கு வாய் இல்லேன்னா உன்ன நாய் கூட மதியாதுலேய் என்று குழைஞ்ஞார். அதற்கு குட்டியோ ஆமா யா இந்த காலத்தில பிழக்கனும்னா பேச தெரியனும்யா... என்ன சொல்லுதீக. என்றான். 
நரைச்ச முடிக்காரர் தலையை கொடுக்க முடி வெட்ட தொடங்கினான்.குடிமகன்கிட்ட வந்திட்டா தலைய எப்படினாலும் ஆட்டிதான் ஆகணும் என்கிறான் குட்டி.அதற்கு நரைச்ச முடிக்காரர் என்னத்த செய்யலே மாதமாச்சின்னா முடி காடா வளந்திடுதே என்கிறார். 

அதற்கு குட்டி எம்ஜியார் மாதிரி வெட்டிகிட்டு எங்கிட்டு போறீரு ? இங்கு தானே கிடப்பீரு ! காடா வளர்ந்தா என்ன என்கிறான் . 
நரச்சமுடிகாரர் முகத்தில் அடித்தது போல் உணர்ந்தார் . இருந்தும் அமைதியாய் உள்ளுக்குள்ளேயே சினத்தை மூடிக்கொண்டு மேலும் பேச்சை தொடர்ந்தார். ஏலே சொல்லுவேலே, கேட்கிற நேரமெல்லாம் வேலை செய்யனும்னுதான் உன் பாட்டனை என் தாத்தா மற்றும் பெரியோர்கள் எல்லாரும் உறுதி மொழி வாங்கினாகன்னு வரலாறு. ஐம்பது காத தொலைவட்டில் இருந்து வந்தீகள். இங்கே இடம் கொடுத்து குடிசை போட்டிகள். பிழைக்க வந்தவுகள் தான் இங்க நாலஞ்சி வீடா இருகீகள் என்றே குதற்கமாகவே நஞ்சை மறைமுகமாக கக்கினார். 
குட்டிக்கும் சினம் கொப்பளித்தாலும் விவரமான பயல்தான் அதனால் அவனும் இவர் பாணியிலே பேசினான். எல்லா வரலாறும் என்னக்கு தெரியும் உம்ம வரலாறு சொல்றன் கேளும். உம்ம பாட்டனுடைய தாத்தா காலத்திலே ஆந்திரா வடக்கில் இருந்து துளுக்கன்கிட்டே உதை வாங்கி பஞ்சத்தில் அடி வாங்கி இங்கே ஓடிவந்தீக தெரியுமா வரலாறு? என்றான். இங்க வாழ்ந்தவுக சொத்துக்கும் பணத்துக்கும் ஆசைபாடதவிய படிக்காதவிய அதனாலே இப்ப நீங்க ஆளூதீக. சரியா ? 
என்றான் குட்டி. ஏலே நீ பேச்சில கெட்டிலா என்று அதிர ஓட்டம் பிடித்தார் நரச்சமுடிக்காரர். போயிட்டு வாரும் ஆண்டு கூலி சரியா கொடும். இப்ப பேயாட்டில போரும். வந்தமா வெட்டிட்டு போனமான்னு இல்ல. எதையாவது வங்கி கட்டனும்னே வர்றது என்று சொல்லிக்கொண்டே பக்கதூருக்கு புறப்பட்டான்.