தொடர்பு

Posted On - 14 Mar 2017

சூபி ஞானி தாநூன், ஞானத் தேடலின் போது ஒரு முறை பாலைவனத்தினூடே நெடுந்தூரம் பயணம் செய்து களைப்புற்றிருந்தார்.கிராமம் ஒன்றை அணுகியபோது ஒரு வீட்டின் கூரை மீது ஓலைகளை அடுக்கிக் கட்டிக் கொண்டிருந்த ஒரு பெண் அவரைப் பார்த்துப் பைத்தியம்போல சிரித்தாள்.ஞானி காரணம் கேட்க,அவள் சொன்னாள்,''நீங்கள் இங்கு வரும்போது உமது கம்பளி மேலாடையைக் கண்டு ஒரு சூபி ஞானி வருகிறார் என்று நினைத்தேன். 

பின் உமது முகத்தைக் கண்டவுடன் நீர் ஒரு குரு அல்ல,சீடன்தான் என்று நினைத்தேன்.அருகில் நெருங்கிய பின்தான் நீர் சீடன் கூட அல்ல,வெறுமனே ஞானம் தேடி அலைபவர் கூட இல்லை என்று எண்ணினேன்.ஞானத்தைத் தேடுகிறேன் என்ற எண்ணத்தில் பெருமிதம் கொள்ளும் ஒரு சவடால் பேர்வழி தான் நீங்கள் என்று தெரிந்து அதனால் சிரித்தேன்.''தனது அங்கிக்கும் தனது ஞானத்துக்கும் தொடர்பே இல்லை என்று உணர்ந்த ஞானி தாநூன் தனது அங்கியை அங்கேயே உதறி எறிந்தார்.