மூடன் கதைகள்

Posted On - 10 Mar 2017
blog

வதாண்டம் என்னும் ஊரில் கிருஷ்ணன் என்பவர் எப்பொழுது பார்த்தாலும் கடவுளை ஏசிக் கொண்டும்,கடவுள் இல்லையென்றும், இல்லாத கடவுளை வணங்குபவர்கள் மூடர்கள் என்றும் நாத்திகம்பேசிக்கொண்டே இருப்பார், 

தம் குடும்பத்திலுள்ள எவரையும் கோவிலுக்கு செல்ல கூட அணுமதிக்க மாட்டார், இவர் முன் யாரேனும் கடவுளை பற்றி பேசினால் பெரும் வில்லனை போல் நடந்து கொள்வார், 

இந்த நாத்திகவாதியை பற்றி கேள்வி பட்ட ஒரு சிறுவன் நாத்திகவாதியிடம் வந்து நீங்கள் கடவுள் இல்லை என்றும், இல்லாத கடவுளை வணங்குபவர்கள் மூடர்கள் என்று கூறுகிறீர்களே, அவ்வாறெனில் இல்லாத கடவுளை ஏசும் நீங்களும் மூடர் தானே என்றான், அதிலிருந்து நாத்திகவாதி நாத்திகம் பேசுவதையே விட்டு விட்டார்.