மாம்பலம் ரயில் நிலையம் மிக மிக அருகில்

Posted On - 09 Mar 2017

ரிட்டன் டிக்கெட்டுடன் ரயிலில் ஏறி மாம்பழத்தில் இறங்கி ,கால் வலியுடன் ப்ளாட்பார்ம் தாண்டி,படி ஏறி இறங்கி,சுட சுட கார மிளகாயுடன் இருக்கும் சமோசா வாசாம் வரவேற்க,சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே சில தூரம் நடந்து ,உடன் வந்தவரைக் காணாமல் கண்கள் தேட,பின் முதுகில் உடன் வந்தவர் செல்லத்தட்டு தட்டும் கண்ணாம்பூச்சி விளையாட்டுகள் விளையாடி,ஈயாக மொய்க்கும் கூட்ட நெரிசலில் வியர்வைத் துளிகள் மிதந்தோட,அந்த பிரபல கடை வெளியே சில நேரம் நின்று கொண்டு வாட்ச்மேன் முறைக்கும்வரை ஏசி காற்று வாங்கி,பர்ஸ் இருக்கிறதா என பாக்கெட்டில் கையை விட்டு அவ்வப்போது சரி செய்து கொண்டு,சரியாக 80 ரூபாயும் 15 நிமிடங்களையும் செலவலித்து மொபைல் கவர் வாங்கிவிட்டு,தாரும் குப்பையும் கலந்து போட்ட சாலையில் வீர நடைபோட்டு,நாக்கை சமாதானம் செய்ய ஆளுக்கொரு ஸ்வீட் கார்ன் வாங்கி சாப்பிட்டு ,அரிசியில் பெயர் எழுதிய கீச்செயின் விலையை 10ருபாய் குைறக்க பல மணிநேரம் போராடி ,5ருபாய் மட்டும் குறைத்த கடைக்காரரிடம் பணத்தையும் அசட்டு சிரிப்பையும் கொடுத்துவிட்டு,திண்று முடித்த ஸ்வீட் கார்ன் கப்பை குப்பைத்தொட்டியில் போட்ட பெருமிதத்துடன் காலரை தூக்கிவிட்டு,கூவிடும் ரயிலை தாவி ஓடி பிடித்து முடிந்தது என் டிநகர் ஷாப்பிங்.