கணைய தொற்றை போக்கும் மருத்துவம்

Posted On - 30 Nov 2016
blog

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவுபொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் உறுப்புகளில் மிக முக்கியமாக விளங்கும் கணையத்தில் ஏற்படும் தொற்று, அழற்சியை போக்கும் மருத்துவத்தை காணலாம். இப்பிரச்னைகளுக்கு மாதுளை தோல், சுக்கு, கீழாநெல்லி, தனியா ஆகியவை மருந்தாகின்றன. 

அடிவயிற்றின் பின்பக்கத்தில் இருப்பது கணையம். இது, ஜீரணத்துக்கான சுரப்பியை உற்பத்தி செய்கிறது. கணையத்தில் பாதிப்பு ஏற்படும்போது செரிமானமின்மை, சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அடிபடுவது, நீண்டநாள் நோய், மதுப்பழக்கம் போன்றவற்றால் கணையம் கெட்டுப்போகிறது. பித்தப்பையில் கற்கள் ஏற்படுவது, பித்தப்பை கெடுவது, சர்க்கரை நோயால் நீண்டநாள் அவதிப்படுவது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும்போது கணையம் பாதிக்கப்படுகிறது. 

கணையத்தில் வீக்கம், அழற்சி, செயல்பாடு இழந்த நிலையால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. வயிற்றுவலி, வாந்தி செரிமானமின்மை உண்டாகிறது. மதுப்பழக்கம், கெட்ட கொழுப்பு போன்றவற்றால் கணையத்தின் செயல்பாடு மந்தப்படுகிறது. 
மாதுளையை பயன்படுத்தி கணையத்தில் ஏற்படும் அழற்சி, தொற்றுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை தோல், சுக்குப்பொடி, திப்லி, பனங்கற்கண்டு.மாதுளை தோலை சிறு துண்டுகளாக்கி போடவும். சிறிது சுக்குப்பொடி, 5 திப்லி, பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர செயலிழந்த கணையம் பழைய நிலைக்கு வரும். வயிற்று வலி குறையும். கணையத்தில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.   கணையத்தில் வீக்கம் ஏற்படுவதால் அங்கு கட்டிகள், ரத்த கசிவு ஏற்படும். அடி வயிற்றில் வலி, வாந்தி, வயிறு வீக்கம் ஏற்படும். நாளடைவில் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. 

நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் திரிபலா சூரணம், நாவல் கொட்டை சூரணத்தை பயன்படுத்தி கணைய அழற்சிக்கான மருந்து தயாரிக்கலாம். திரிபலா சூரணம், நாவல் பழ கொட்டை சூரணம் தலா ஒரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இரவு தூங்க போகும் முன்பு இதை குடித்துவர கணையத்தில் ஏற்படும் அழற்சி சரியாகும். கணையம் நல்லமுறையில் இயங்க பயன்படுகிறது. பசி தூண்டப்படும்.  கீழாநெல்லியை பயன்படுத்தி கணையத்தில் ஏற்படும் வீக்கத்தை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கீழாநெல்லி, தனியா. செய்முறை: ஒருபிடி அளவு கீழாநெல்லி இலையுடன், ஒரு ஸ்பூன் தனியா சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி தேன் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக மிளகுப்பொடி சேர்க்கலாம். இதை வடிகட்டி காலை வெறும் வயிற்றில் குடித்துவர கணையத்தில் உள்ள வீக்கம், புண்கள், கட்டிகள் குணமாகும். கீழாநெல்லி கல்லீரல், மண்ணீரல் வீக்கம், மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. இதேபோல் கணையத்தில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. சிறார்களுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். சுண்டைக்காய் அளவுக்கு பெருங்காயத்தை பொடித்து நீரில் கலந்து அல்லது தேனில் குழைத்து கொடுப்பதால் இருமல் சரியாகும் 

Related Keywords

தொப்பை மூட்டு வலி கணையம் சிறுநீரக கற்கள் மன அழுத்தம் இரத்தத்தை சுத்திகரிக்க உடலுறவின் போது பருக்கள் கொழுப்பை கரைக்க தலைமுடி வளர்ச்சிக்கு