ஹேர்கலரிங் - ஒரு நிமிடம்..

Posted On - 16 Oct 2016
blog

இப்பவுள்ள காலத்தில் ஆண்கள் பெண்கள் என்று எல்லோரும் ஹேர் கலரை மாற்றுவது ஃபேஷன் ஆகிவிட்டது।

முன்பெல்லாம் முடியினை கருப்பாய் மாற்ற வழி தேடினோம் இப்ப டிரெஸ்க்கு மெட்சாக கலரை மாற்ற வழி தேடுகிறோம்.

சரியான வழி தெரியாமல் தரமில்லாத ஹேர் கலரிங் செய்வதால் பல பாதிப்புகள் தலைமுடிக்கு மட்டுமல்ல உடலில் பல பகுதிகள் பாதிக்கப்படும்

பொதுவாக அடிக்கடி ஹேர் கலரிங் செய்வதால் தலை பகுதி மற்றும் கழுத்து நெற்றி போன்ற பகுதியில் அரிப்பு, சில இடங்களில் தடிப்பு, முடி அதிகமாக கொட்டுதல் அல்லது முழுமையாக முடியின் கலர் மாறி வெள்ளையாகவோ அல்லது மஞ்சள் கலராகவோ மாறிவிடும்.

அதோடு மட்டுமில்லாமல் முடியினை தொட்டாலே முள் குத்துவது போல் இருக்கும்.

இதனை தடுக்க கெமிக்கல் இல்லாத கலரிங் செய்வது தான் சரியான தேர்வு.

நாமே ஹேர் கலரிங் செய்வதை விட நல்ல திறமையான ப்யூட்டி பார்லரில் செய்வது நலம்.

கெமிக்கல் ஹேர் கலரிங்க செய்யதவுடனே ஹென்னா பேக் தலைக்கு போடக்கூடாது