குளிர்ச்சியளிக்கும் முலாம்பழம்

Posted On - 12 Sep 2016
blog

வாய்புண்களையும் ஆற்றும். ஈரலுக்கும் குளிர்ச்சியளிக்கும். சிறுநீர் எரிச்சலை தடுக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். பித்தம் அதிகரிப்பதை தடுக்கும். மலச்சிக்கலையும் போக்கும். முலாம்பழத்தில் போலிக் அசிட் இருப்பதால் இது பெண்களுக்கு சிறந்த உணவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடவேண்டும். சாப்பிட்டால், ஊட்டச்சத்து குறைபாட்டால் வயிற்றுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கும்.


முலாம்பழத்தில் ‘அஸ்காரிபிக் அமிலம்’ இருக்கிறது. இது வைட்டமின் சி சத்தை அளித்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் சத்து தசைகள் சுருங்கி விரிய உதவுகிறது. குறிப்பாக இதயத்தில் உள்ள தசைகளும், ரத்தகுழாய்களும் நன்றாக செயல்பட உதவுகிறது.

முலாம்பழத்தில் மாவுசத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ,பி,சி, போன்றவை நிறைந்திருக்கிறது. முலாம் பழத்தில் கரோட்டினாய்டு என்ற நிறமி இருப்பதால் அது மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. இந்த நிறமியால் அதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. இது கண்பார்வை சக்தியை அதிகரிக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

Related Keywords

சிறுநீரகம் இரத்த தானம் கொலஸ்ட்ரால் கால்களின் உறுதி தலைவலி இதய பாதிப்பு கற்றாழை ஆரோக்கியமா வாழ பிசியோதெரபி புரோட்டீன்