மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் உதவும் அன்னாசிப்பழம்!

Posted On - 25 Jul 2018
blog

எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவும். அன்னாசி உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு சக்திதான் முக்கிய காரணம்.

    அன்னாசியில் வைட்டமின்களான வைட்டமின் பி6, பி1 மற்றும் பி12 போன்ற எலும்புகளின் வலிமைக்கு உதவும் சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. பழங்கள் அனைத்தும் முக்கியத்துவம் இருந்தாலும் அன்னாசிப்பழம் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த  பழமாகும்.   அன்னாசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள்  மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது.   அன்னாசி பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும் கண் ஒளி பெறும். குழந்தைகளுக்கு  அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர பசி ஏற்படும். எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும்..   அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து தான் மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத்திசுக்களின்  கூட்டுச்சேர்க்கைக்கு உதவி, எலும்புகளை வலிமையாக்குகிறது.   அன்னாசியில் உள்ள முக்கிய கனிமச்சத்தான காப்பர் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மூட்டு மற்றும்  எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.   எலும்புகளில் ஏற்படும் முறிவு மற்றும் வலியைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் அன்னாசிப்பழம் பெரிதும் உதவும்.

Related Keywords

இதய பாதிப்பு சிறுநீரக கற்கள் முடி உதிர்வை இளநரை முடி கர்ப்ப காலத்தில் பிசியோதெரபி தலைமுடி ஜீரண சக்தி கொலஸ்ட்ரால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க