அசுத்தமான நுரையீரலை சுத்தம் செய்யும் ஓர் அற்புத நாட்டு மருந்து!

Posted On - 02 Sep 2016
blog

புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட பழக்கத்தைக் கைவிட முடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், மனதில் உள்ள பாரத்தைக் குறைப்பதற்காகவே பலர் புகைப்பிடிக்கின்றனர். 
மூன்றே நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி?
இப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, அதனால் நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றால் நாள்கணக்கில் அவஸ்தைப்படக்கூடும். புகைப்பிடித்தால் மட்டும் தான் நுரையீரலில் பிரச்சனைகள் வரும் என்பதில்லை. அதை சுவாசித்தாலும் தான் பாதிப்பு ஏற்படும். 
நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க... 

ஆகவே சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது.தேவையான பொருட்கள்: 
மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 400 கிராம் (பொடியாக நறுக்கியது) இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை - 400 கிராம் தண்ணீர் - 1 லிட்டர்மஞ்சள்: 
இந்த மருந்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும். மேலும் ஆய்வுகளும் மஞ்சள் நுரையீரலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்துவதாக கூறுகின்றன.

பூண்டு 
பூண்டில் உள்ள அல்லின், உடலினுள் செல்லும் போது அல்லிசினாக மாறி, பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கும் ஓர் நல்ல பாதுகாப்பை வழங்கும்.
இஞ்சி 

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள், நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலில் உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.
செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.

பயன்படுத்தும் முறை 

இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். 
குறிப்பு 

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.


Related Keywords

கல்லீரல் மாதவிடாய் காலத்தில் புழுக்களை அழிக்க தலைமுடி இதயத்தின் ஆரோக்கியம் புகைப் பிடிப்பதால் தொப்பை மூட்டு வலி புரோட்டீன் முடி உதிர்வை