சோளக்கருதில் இருக்கும் நாரை ஏன் தூக்கிப் போடக் கூடாது? வியக்கும் சத்துக்கள்!!

Posted On - 30 Aug 2016
blog

சோளக் கருதின் நிறமும் சுவையும் மனதை பறிப்பவை. நிறைய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. அதிக சத்துக்களை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். விட்டமின், மினரல்கள் இருக்கின்றன. இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் சோளக்கருதுவில் இருக்கும் பட்டு போன்ற நாரை நாம் என்றைக்காவது உபயோகித்திருக்கிறோமா? அதனை பிய்த்தெறிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் நாரிலிருக்கும் சத்துக்கள் மற்றும் பயன்களைப் பற்றி தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.


சோள நாரில் இருக்கும் சத்துக்கள் : 

சோள நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து உள்ளது. இதிலுள்ள ஒரு ரசாயனம் சிறு நீரை அதிகப்படுத்தும். காயம் மற்றும் வீக்கங்களை குறைக்கும்.


ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும் : 

சோள நாரில் அதிகமாக விட்டமின் கே உள்ளது. காயங்களினால் உண்டாகும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, ரத்தத்தை உறையச் செய்கிறது.


சிறு நீரக கற்களை கரைக்கிறது : 

சிறு நீரகத்தில் கரையாத மினரல்கள் படிமமாக மாறுவதைத்தான் கற்கள் என்போம். அதனை கரைக்க சோள நார் உதவுகிறது. மேலும் இம்மாதிரியான கற்களை உருவாகாமலும் உதவுகிறது. ப்ரோஸ்டேட் வராமல் காக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது : 


உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் பல்வேறு பெரிய பிரச்சனைகள் தலை தூக்கும். இந்த சோள நார் கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்துகிறது. அதிக கொலஸ்ட்ராலை கல்லீரலுக்கு அனுப்பி ஜீரணமாக உதவுகிறது.
சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் : 


சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும், உடல் பருமானனவர்களும் இதை சாப்பிட்டால் பல பிரச்சனைகளிலிருந்து தங்களை பாதுகாக்கலாம். இது இன்சுலின் ஹார்மோனை தூண்டுகிறது. சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தாமல் காக்கிறது.
சோள நார் தேநீர் : 


2 கப் நீரில் 2 ஸ்பூன் நாரை கலந்து கொதி வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டி அதனை குடித்தால் இதய பிரச்சனைகள் வராது.


Related Keywords

சிறுநீரக தொற்று வெள்ளரி சாறு இளநரை முடி முடி உதிர்வை உடல் எடை தலைமுடி சிறுநீரகம் தலைவலி கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க