கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்

Posted On - 15 Sep 2016
blog

கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!என் அனுபவம் பற்றிய பதிவும் கூட!
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல்அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।
பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல்நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப்பரிச்சயமாகிவிடும்!அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப்பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது,குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!
அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள்குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்ததுமுதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கிலஎழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம்செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!
வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா?  அதன் மன நிலைபாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக்கூறுகிறேன்
இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படிபடிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது!
இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாகஇருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுயவேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துஇறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!
நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள்சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவைகேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியேசத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போதுஎன்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;
நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின்உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில்இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்குஅந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!
உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய்விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!
இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்!என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....
* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்றுதெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள்நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூடதிறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம்நோக்கி தலையைத் திருப்புவான்!
*நான் அவனுக்கு